சென்னையில் உள்ள ரயினோ பிரைன் அமைப்பு சார்பில் நடைபெற்ற தேசிய அளவிலான அபாகஸ் போட்டியில் 6 முதல் 14 வயதிற்குட்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்ட போட்டியில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குமாரபாளையம் பகுதியில் வசிக்கும் மாணவர் ஹரிஹரன் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.
ஹரிஹரன் ஏற்கனவே மாநில அளவிலான போட்டியில் 2 முறையும், தேசிய அளவிலான போட்டியில் 2 முறையும் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளார். தற்போது மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற ஹரிஹரனை ப்ரைனோ பிரைன் அமைப்பின் நிர்வாக இயக்குனர் ஆனந்த் சுப்பிரமணியம் பாராட்டி பரிசு வழங்கியுள்ளார். இதனை அடுத்து கல்வியாளர்கள், முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் மாணவனை பாராட்டி வருகின்றனர்.