Categories
சினிமா தமிழ் சினிமா

அட!… அட!… ஒரே மேடையில் தலைவியுடன் ஜி.பி முத்து…. என்னம்மா கலக்குறாரு…. வேற லெவல் போங்க….!!!!

பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி புயலாக வலம் வருபவர் நடிகை சன்னி லியோன். இவர் தற்போது தமிழில் ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படம் காமெடி ஹாரர் திரைப்படமாக உருவாகியுள்ள நிலையில், அறிமுக இயக்குனர் யுவன் படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை சசிகுமார் மற்றும் வீரமணி ஆகியோர் இணைந்து தயாரிக்க, நடிகர்கள் சதீஷ், யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ஜி.பி முத்து, ரமேஷ் திலக், நடிகை தர்ஷா குப்தா  ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு அஜீஸ் அசோக் என்பவர் இசையமைத்துள்ளார்.இந்த படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று நடைபெற்றது. இந்த விழாவில் நடிகை சன்னி லியோன் உட்பட பட குழுவினர் கலந்து கொண்டனர். இந்நிலையில் ஓ மை கோஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ள ஜிபி முத்து விழாவில் கலந்துகொண்டு மேடையில் பேசினார். அவர் கூறியதாவது, நான் இதற்கு முன்னால் இந்த படத்திலும் நடித்தது கிடையாது. எனக்கு முதன்முதலாக ஓ மை கோஸ்ட் என்ற திரைப்படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு கொடுத்த இயக்குனர் அவர்களுக்கு என்னுடைய நன்றி.

நான் இயக்குனரிம் எனக்கு பயமாக இருக்கிறது என்று கூறிய போது அவர் பயப்படாதீங்க என்று எனக்கு தைரியம் கொடுத்தார். அவர் சொல்லி கொடுத்த மாதிரி நானும் நன்றாக நடித்துள்ளேன். எனக்கு சன்னி லியோன் யாருன்னு தெரியாது. ஆனால் ஆனந்த் சன்னி லியோன் பற்றி எனக்கு சில படங்களை காண்பித்தார். ஐயோ படம்னு சொல்லிட்டு என்ன படத்தை காமிச்சான் தெரியுமா. நீங்க எதுவும் தப்பா நினைச்சுக்காதீங்க.

எனக்கு சன்னி லியோன் கூட சேர்ந்து நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் என்னுடைய நண்பர் இறந்து விட்டதால் அவரால் வர முடியவில்லை. எனக்கு படத்தில் அருமையான கதாபாத்திரம். அந்த டாக்டரோட பேர கேட்டாலே எனக்கு இப்பவும் சிரிப்பு வருது. இந்த படத்துல நடிச்சது எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. எனக்கு நயன்தாரா மற்றும் சிம்ரன் ஆகியோரோடு சேர்ந்து நடிப்பதற்கு ஆசையாக இருக்கிறது என்று கூறினார். மேலும் இசை வெளியீட்டு விழாவில் எடுக்கப்பட்ட வீடியோவானது தற்போது வைரலாகி வருகிறது.

Categories

Tech |