3,000 கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ய எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ய எலான் மஸ்க் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. பிரபல சமூக வலைதள நிறுவனமான ட்விட்டரை உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் வாங்கியதிலிருந்து ட்விட்டரில் பல்வேறு மாற்றங்களை அவர் செய்து வருகின்றார். எலான் மஸ்க் கிட்டத்தட்ட 3 ஆயிரத்து 700 ஊழியர்களை பணி நீக்கம் செய்வார் எனவும் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு இந்த வார இறுதிக்குள் தகவல் தெரிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இதுவரை பணிநீக்கம் தொடர்பான தகவலை எலான்மஸ் அல்லது மைக்ரோ பிளாக்கிங் தளம் உறுதிப்படுத்தவில்லை.
இந்த நிலையில் ட்விட்டர் ஊழியர்கள் பணி நீக்கம் இல்லை என எலான் மஸ்க் மறுத்தாலும் பல உயர் நிர்வாகிகள் நிறுவனத்தை விட்டு வெளியேறி இருக்கின்றனர். முன்னாள் twitter தலைமை நிர்வாக அதிகாரி பராக் அகர்வால் மற்றும் சட்டமன்ற கொள்கை தலைவர் விஜயா காடே போன்றோர் கடந்த வாரம் எலான்மஸ் ட்விட்டர் நிறுவனத்தை வாங்கிய பின் நீக்கப்பட்டவர்களின் முதன்மையானவர்களாகவும் இந்த முன்னாள் ட்விட்டர் நிர்வாகிகள் இரண்டு பேரும் தங்கள் ட்விட்டர் சுய விவரங்களில் இருந்து ட்விட்டரில் பணிபுரிவதை நீக்கி இருக்கின்றனர்.
மேலும் தற்போது வீட்டில் இருந்து வேலை என்ற கொள்கையை மாற்றி அமைக்க விரும்புவதாக தெரிவிக்கப்படுகிறது. டெஸ்லாவில் செய்ததைப் போலவே எலான்மஸ் ட்விட்டர் ஊழியர்களை அலுவலகத்திற்கு திரும்ப சொல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சில மாதங்களுக்கு முன்பாக எலான் மஸ்க் டெஸ்லா ஊழியர்களை அலுவலகத்திற்கு திரும்ப வேண்டும் இல்லையென்றால் வேலையை விட்டு வெளியேறும்படி கேட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.