புதுச்சேரி அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. புதுவை விடுதலை நாள் விழாவில் பேசிய முதல்வர் ரங்கசாமி, பல்வேறு துறைகளில் காலி பணியிடங்கள் நிரப்புதற்கான அறிவிப்பை வெளியிட்டார். அதனை தொடர்ந்து அரசு பணியிடங்கள் குறித்த அரங்கத்தையும் திறந்து வைத்து நோட்டீசை வெளியிட்டார். பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்த துறை அரசின் பல்வேறு துறைகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வருவாய்த்துறையில் கிராம உதவியாளர் 28, எம்.டி.எஸ். 7 பணியிடங்களுக்கு வருகிற டிசம்பர் 12ம் தேதி முதல், காவல்துறையில் கான்ஸ்டபிள் 253 பணியிடங்களுக்கு வருகிற 28ம் தேதி, சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு 60 பேருக்கு வருகிற 10 ஆம் தேதி, டிரைவர் 26 பணியிடங்களுக்கு வருகிற 21 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். அதனைப்போல தீயணைப்பு துறையில் நிலைய அதிகாரி 5, தீயணைப்பு வீரர் 58, தீயணைப்பு நிலைய டிரைவர் 12 பேர் பணிக்கு வருகிற 7ம் தேதி, வேளாண்துறையில் வேளாண் அதிகாரி 23, வேளாண் அதிகாரி (அக்ரி என்ஜினியர்) 5, வேளாண் அதிகாரி(புவியியல்) 5 ஆகிய பணியிடங்களுக்கு வருகிற 21ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். தொழில்துறையில் தொழில்நுட்ப அதிகாரிக்கான 19 பணியிடங்களுக்கு வருகிற 16 ஆம் தேதி மு, போக்குவரத்து துறையில் உதவி மோட்டார் வாகன ஆய்வாளர், உதவி பொறியாளர் 9, அலமாக்க உதவியாளர் 30 ஆகிய பணியிடங்களுக்கு வருகிற 12 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்.
Categories
இளைஞர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. புதுவை அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்க தயாரா?… வெளியான மாஸ் அறிவிப்பு…!!!!

அதனைத்தொடர்ந்து பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையில் பீல்டு சூபர்வைசர் 27, புள்ளியியல் அதிகாரி 26 ஆகிய பணிகளுக்கு வருகிற 15 ஆம் தேதி, நில அளவைத்துறையில் வரைபடவியலாளர் 12, பீல்டு சர்வேயர் 27, பீல்டு உதவியாளர் 31 ஆகிய பணிகளுக்கு வருகிற 12 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். கணக்கு மற்றும் கருவூலத்துறையில் ஸ்டோர் கீப்பர் 55 காலியிடங்களுக்கு வருகிற 30ம் தேதி, திட்டம் மற்றும் ஆராய்ச்சித்துறையில் திட்ட உதவியாளர் 4, ஆய்வு பகுப்பாளர் 5 ஆகிய பணிகளுக்கு வருகிற 23 ஆம் தேதி முதல், சுகாதாரத்துறையில் தொழில்நுட்ப உதவியாளர் 13 பணிக்கு வருகிற 25 ஆம் தேதி, பிசியோதெரபி 3 பணிக்கு வருகிற 20 ஆம் தேதி, சமூக சேவை 21 பணிக்கு வருகிற 21ம் தேதி விண்ணப்பிக்கலாம். தொழில்துறையில் தொழில்நுட்ப அதிகாரி 19 பணிக்கு வருகிற 16ம் தேதி முதலும், போக்குவரத்து துறையில் உதவி மோட்டார் வாகன ஆய்வாளர், உதவி பொறியாளர் 9, அலமாக்க உதவியாளர் 30 பேர் ஆகிய பணிகளுக்கு வருகிற 12ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். இதற்கான அறிவிப்பை அரசியல் சார்பு செய்யலர் ஜெயசங்கர் வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு புதுவை இளைஞர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு சிறப்பு பயிற்சி பெற தனியார் பயிற்சி மையங்களை நாடி வருகின்றனர். மேலும் உதவியாளர் பணி நேரடி நியமனத்திற்கு அமைச்சக ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் அந்த பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்படவில்லை