Categories
உலக செய்திகள்

“அடேங்கப்பா!”… இத்தனை கோடியா?… எலான் மஸ்க் வாங்கப்போகும் நவீன சொகுசு விமானம்…!!!

உலகின் முதல் பணக்காரராக திகழும் எலான் மாஸ்க் அதி நவீன சொகுசு விமானத்தை வாங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலக பணக்காரரான எலான் மஸ்க், சுமார் 646 கோடி ரூபாய் மதிப்பில் ஜி 700 என்னும் ஜெட்  விமானத்தை வாங்குவதற்கு ஆர்டர் கொடுத்திருக்கிறார். கல்ப்ஸ்ட்ரிம் ஏரோஸ்பேஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் என்ற அமெரிக்காவின் விமான உற்பத்தியாளர், இந்த விமானத்தை உற்பத்தி செய்து கொண்டிருக்கிறது.

இந்த விமானம் நவீன முறையில் பல்வேறு வசதிகளுடன் தயாரிக்கப்படுகிறது. அந்த வகையில் சுமார் 57 அடி நீளத்தில் இருக்கும் இந்த விமானமானது, சுமார் 7500 கடல் மைல்கள் தொடர்ச்சியாக பறக்கும். இரு rolls-royce என்ஜின்கள் கொண்டு செயல்படும் இந்த விமானத்தில் வைஃபை போன்ற நவீன வசதிகளும் இருக்கின்றன

எரிபொருள் இல்லாமலேயே ஆஸ்திரேலியாவிலிருந்து ஹாங்காங் வரை பறக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருட ஆரம்பத்தில் இந்த விமானம் எலான் மஸ்கிடம் சென்று விடும் எனவும் அடுத்த வருடத்திலிருந்து புதிய விமானத்தை அவர் பயன்படுத்தலாம் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |