Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

இந்து சமய அறநிலைத்துறையின் திட்டப்படி…. தங்க நகைகளில் கற்களை பிரித்தெடுக்கும் பணி தொடக்கம்….. வெளியான தகவல்…!!!

தமிழகம் முழுவதும் இந்து அறநிலையைத் துறைக்கு சொந்தமான கோவில்கள் அமைந்துள்ளது. இங்கு பயன்படுத்தாமல் இருக்கும் தங்க நகைகளை உருக்கி தங்க கட்டிகளாக மாற்றி பாரத் ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்ய திட்டமிடப்பட்டது. அதன்படி கடந்த 2013-ஆம் ஆண்டு கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வன பத்ரகாளியம்மன் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 21 கிலோ 785 கிராம் தங்க நகைகள் இருக்கிறது. இந்த நகைகளில் இருக்கும் அரக்கு மற்றும் கற்களை பிரித்தெடுக்கும் பணி பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சுப்ரீம் கோர்ட் ஓய்வு பெற்ற நீதிபதி துரைசாமி ராஜு தலைமையில் நடைபெற்றுள்ளது.

இதனை அடுத்து கோவை மாவட்ட துணை ஆணையர் ரமேஷ், கோவில் பரம்பரை அறங்காவலர் வசந்தா, கோவை மாவட்ட வைர நுண்ணறிஞர் ஜீவானந்தம், இளநிலை தொழில்நுட்ப உதவியாளர் விக்னேஷ், கோவில் கண்காணிப்பாளர் மல்லிகா ஆகியோர் முன்னிலையில் கடந்த 31 ஆம் தேதி முதல் கற்களை பிரித்து எடுக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பின்னர் மும்பையில் இருக்கும் மத்திய அரசின் தங்க உருக்காலைக்கு பிரித்து எடுக்கப்பட்ட தங்க நகைகள் அனுப்பப்பட்டு கட்டிகளாக மாற்றப்படும். இதனை தொடர்ந்து தங்கக் கட்டிகள் பாரத் ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்யப்படும். இந்த பணியானது வருகிற 4-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அதிகாரிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |