Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

#PAKvSA : பரபரப்பான போட்டி…. “மில்லர் இல்லை”….. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு.!!

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

ஐசிசி டி20 உலக கோப்பை சூப்பர் 12 போட்டிகள் ஆஸ்திரேலியாவில் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பரபரப்பாக நடைபெற்று வரும் இந்த சூப்பர் 12 சுற்றில் குரூப் 1 பிரிவில் ஆறு அணிகள் மற்றும் குரூப் 2 பிரிவில் ஆறு அணிகள் என மொத்தம் 12 அணில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்நிலையில் இன்று குரூப் 2 பிரிவில் உள்ள தென்னாப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு சிட்னி மைதானத்தில் மோதுகிறது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் பேட்டிங்கை தேர்வுசெய்துள்ளார்.

தென் ஆப்பிரிக்கா அணி இதுவரை 3 போட்டிகளில் இரண்டு வெற்றியை பெற்று 5 புள்ளிகள் பெற்றுள்ளது. ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டி மழையால் கைவிடப்பட்டதால் தென்னாப்பிரிக்காவுக்கு ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது. அதேசமயம் பாகிஸ்தான் அணி இந்தியா மற்றும் ஜிம்பாவே அணியிடம் தோல்வியை சந்தித்து கடைசியாக நெதர்லாந்து வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றுள்ளது. இந்தியா 6 புள்ளிகளுடன் முதலிடத்திலும், தென்னாப்பிரிக்கா 5 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன. போட்டியில் ஒரு வெற்றியுடன் 2 புள்ளிகள் பெற்று பாகிஸ்தான் ஐந்தாவது இடத்தில் உள்ளது.

இந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணி அதிக ரன் ரேட்டில் வெற்றி பெற வேண்டும். அதன் பிறகு வங்கதேசத்துக்கு எதிரான போட்டியிலும் அதிக ரன் ரேட்டில் பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டும். அதே சமயம் இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணி தோல்வி அடைந்தாலும், அடுத்த போட்டியில் நெதர்லாந்து அணியிடம் வீழ்ந்தால் மட்டுமே பாகிஸ்தானுக்கு வாய்ப்புள்ளது..

இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணியில் மஹாராஜ் மற்றும் டேவிட் மில்லர் ஆகியோர் முதுகு வலியின் காரணமாக விளையாடவில்லை. அவர்களுக்கு பதிலாக ஷம்சியும் கிளாசனும் களமிறங்குகின்றனர்.

தென்னாப்பிரிக்கா லெவன் :

டெம்பா பவுமா, குயிண்டன் டி காக், ரோசோவ், எய்டன் மார்க்ரம், கிளாசென், டி ஸ்டப்ஸ், பார்னெல், ரபாடா, நார்ட்ஜே, என்கிடி, டி ஷம்சி.

பாகிஸ்தான் லெவன்:

பாபர் அசாம், முகமது ரிஸ்வான், ஷான் மசூத், முகமது ஹாரிஸ், இப்திகார் அகமது, ஷதாப் கான், முகமது நவாஸ், முகமது வாசிம், ஷஹீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுஃப், நசீம் ஷா.

Categories

Tech |