கர்நாடக மாநிலத்தில் ஹாசன் என்ற மாவட்டத்தில் பேரூர் என்ற இடத்தில் சென்னகேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை முற்காலத்தில் விஜயநாராயணர் கோவில் என்று அழைப்பர். பெருமாளை முக்கிய கடவுளாக கொண்டிருக்கும் இந்த கோவில் வைணவர்களின் வழிபாட்டு தலங்களில் முக்கியத்துவம் பெறுகின்றது. அது மட்டுமல்லாமல் இந்த கோவில் விஷ்ணுவர்தன் என்ற அரசரால் கிபி 1117 ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது.
இதில் உள்ள மூலவரான கேசவ நாராயணர் பலி பீடத்தையும் சேர்த்து 15 அடி உயரம் கொண்டிருப்பார். அது மட்டும் அல்லாமல் இங்கு பெண் உருவத்தில் காட்சியளிப்பது சிறப்பு வாய்ந்ததாகும். குறிப்பாக இந்த ஆலயம் மூன்று வாசல்களை உடையது. மேலும் இரண்டு கர்ப்ப கிரகத்தையும் கொண்டது. இந்த இரண்டாவது கர்ப்பகிரகத்திலும் கேசவநாராயினரே மூலவராக இருக்கிறார். இதனை விஷ்ணுவர்த்தனின் மனைவியான சாந்தலா தேவி கட்டியுள்ளார். இதனை அடுத்து இந்த கோவிலில் 42 அடி உயரம் உள்ள தூண் ஒன்று உள்ளது.
இதனை மகா ஸ்தம்பம் அல்லது கார்த்திகை தீபோற்சவ ஸ்தம்பம் என்றும் அழைப்பது வழக்கம். இந்தத் தூண் பக்தர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஏனென்றால் இந்த தூணுக்கு இதுவரை அடித்தளம் என்பது இல்லை. அதுமட்டுமல்லாமல் ஒரே கல்லால் செய்யப்பட்ட மேடையில் நிறுத்தி வைக்கப்பட்ட இந்த தூணின் அடிப்பாகம் மேடையை தொடாமல் இன்று வரை உள்ளது. இந்த ஸ்தம்பம் அடித்தளத்தை ஒட்டாமல் இருப்பது அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்துகின்றது.