Categories
மாநில செய்திகள்

#BREAKING : பறிமுதல் செய்யப்படும் வாகனங்களுக்கு 14 நாட்களுக்குள் அபராதம் செலுத்தாவிட்டால் ஏலம் – போலீஸ் எச்சரிக்கை..!!

மது போதையில் இயக்கியதற்காக பறிமுதல் செய்யப்படும் வாகனங்களுக்கு 14 நாட்களுக்குள் அபராதம் செலுத்தாவிட்டால் ஏலம் விடப்படும் என போலீஸ் எச்சரிக்கை விடுத்துள்ளது.

சட்டம் ஒழுங்கை காக்க தமிழக காவல்துறை, தமிழக போக்குவரத்து காவல்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக மது போதையில் வாகனம் இயக்கியவர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்றும், அபராதம் செலுத்தினால் மட்டுமே திருப்பி கொடுக்கப்படும் என ஏற்கனவே விதி இருக்கிறது. இந்நிலையில் 14 நாட்களுக்குள் அபராதம் செலுத்த தவறினால் பறிமுதல் செய்யப்பட்ட வாகனம் ஏலம் இடப்படும் என போக்குவரத்து காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

போக்குவரத்து காவல்துறை சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. குறிப்பாக போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டினால் அபராத தொகை கூடுதலாக வசூலிக்கப்படும் என அறிவிப்பை வெளியிட்டு இருந்தது. அந்த வகையில் செல்போன் வைத்துக்கொண்டு வாகனத்தை இயக்கினால், சீட் பெல்ட் போடாமல் வாகனத்தை இயக்கினால், அதே போல ஹெல்மெட் போடாமல் வாகனத்தை இயக்கினால் உட்பட எந்த ஒரு போக்குவரத்து தவறுகளில் ஈடுபட்டாலும் அவருக்கு அபராத தொகை ஒன்றில் இருந்து இரண்டு மடங்காக உயர்த்தி வசூலிக்கப்படும் என எச்சரிக்கையை கடந்த சில நாட்களுக்கு முன்பாக தமிழக அரசு அறிவித்திருந்தது.

சமீபத்தில் அந்த நடைமுறை போக்குவரத்து போலீசார் நடைமுறைப்படுத்தி வருகின்றனர். இந்த நடைமுறையில் அதிகபட்சமாக அபராத தொகை வசூலிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மது அருந்திவிட்டு வாகனத்தை ஓட்டினால் கூடுதலாக அபராதம் வசூலிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருந்தனர். அதற்கான அபராத தொகை செலுத்தவில்லை என்றால் வாகனத்தை பறிமுதல் செய்யப்பட்டு ஏலத்தில் விடப்படும் என்று வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை கொடுத்திருந்தனர்.இது நடைமுறைப்படுத்தப்பட்டு போக்குவரத்து போலீசார் தயார் நிலையில் இருப்பதாகவும் போக்குவரத்துதுறை தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.

 

Categories

Tech |