சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவில் பகுதியில் கருணாநிதி என்பவர் வசித்து வருகிறார். இவர் மதுரையில் உள்ள ஹை கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, எங்கள் கிராமத்தில் ஒரு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியர் கிராம மக்களுக்கு வட்டிக்கு பணம் கொடுக்கிறார். அதோடு வட்டிக்கு பணம் வாங்கியவர்களின் குழந்தைகள் பள்ளிக்கு செல்லும்போது அவர்களை பல வழிகளில் தண்டிக்கிறார்.
எனவே ஹெட் மாஸ்டர் மீது உரிய நடவடிக்கை எடுக்க கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த மனு தொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி அரசு தரப்பில் மனுவுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று கூறினார். மேலும் வழக்கு விசாரணையை 2 வார காலத்திற்கு ஒத்தி வைத்துள்ளார்.