Categories
தேசிய செய்திகள்

மெட்ரோ ரயிலில் பயணிக்க வாட்ஸ்-அப் மூலம் டிக்கெட் வினியோகம்…. அரசு புதிய அதிரடி….!!!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் கன்னட ராஜ்யோத்சவா தினத்தை முன்னிட்டு மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய whatsapp மூலம் டிக்கெட் விநியோகம் செய்ய நிர்வாகம் முடிவு செய்தது.அதன்படி நேற்று முன்தினம் மெட்ரோ ரயிலில் பயணிகள் whatsapp மூலம் டிக்கெட் எடுத்து பயணிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் ராஜ் யோத்சவா தினத்தில் மெட்ரோ ரயிலில் 1669 பயணிகள் வாட்ஸ் அப் மூலமாக டிக்கெட் எடுத்து பயணம் செய்துள்ளனர். அதே சமயம் வாட்ஸ் அப் மூலமாக டிக்கெட் எடுத்து மெட்ரோ ரயிலில் பயணிக்க 14,400 பேர் புதிதாக இணைந்திருப்பதாகவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.வாட்ஸ் அப்பில் டிக்கெட் எடுத்து பயணம் செய்யும் இந்த சேவை பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Categories

Tech |