Categories
தேசிய செய்திகள்

ஃபிக்சட் டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதம் உயர்வு…. எவ்வளவு தெரியுமா….? ஐசிஐசிஐ வங்கி அறிவிப்பு….!!!

இந்தியாவில் தனியார் வங்கியான ஐசிஐசிஐ வங்கி பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதாக அறிவித்துள்ளது.   இதன்படி 46 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான ஃபிக்சட் டெபாசிட்டுகளுக்கு வட்டி விகிதம் 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டுள்ளது. 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகளுக்கு வரையிலான திட்டங்களுக்கு 3% முதல் 6.25% வரையிலும், மூத்த குடிமக்கள் ஃபிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு 3.50% முதல் 6.95% வரையிலும் வட்டி உயர்ந்துள்ளது.

3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரையிலுள்ள திட்டங்களுக்கு 6.35%, மூத்த குடிமக்களுக்கு 6.85% வட்டி உயர்கிறது. 5 ஆண்டு முதல் 10 ஆண்டுகள் வரையிலான திட்டங்களுக்கு 6.25%, மூத்த குடிமக்களுக்கு 6.95% உயர்கிறது.

Categories

Tech |