Categories
மாநில செய்திகள்

ஒரு நாள் மழைக்கே தத்தளிக்குது சென்னை…. குமுறும் மக்கள்….. கேப்டன் வெளியிட்ட அறிக்கை…!!!!

தமிழகத்தில் கடந்த 29ஆம் தேதி முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் ஆங்காங்கே வெள்ளக்காடாக் காட்சி அளித்து வருகிறது. வெள்ள நீரை அகற்றும் பணிகளில் மாநகராட்சி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஒரு நாள் மழைக்கே சென்னை மாநகரம் வெள்ளத்தில் தத்தளிப்பதாக கூறியுள்ளார்.

சென்னையில் வடிகால் பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. மழைநீர் வெளியேற முடியாமல் சாலைகளில் பாய்ந்து ஓடுகிறது. முதல்வர் தொகுதியான கொளத்தூரில் வீடுகளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் விடிய விடிய தூங்காமல் தவிக்கும் நிலை ஏற்பட்டது. மழை நீரை வெளியேற்ற அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை அதிகாரிகள், அமைச்சர்கள் வந்து தங்களை பார்வையிடவில்லை என்று மக்கள் குமுறுகின்றனர் என்று கூறியுள்ளார்

Categories

Tech |