கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று (03.11.2022) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை தொடங்கிய சூழ்நிலையில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.. மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த கனமழையால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் முன்னதாகவே விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு இன்று (03.11.2022) விடுமுறை என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பல்வேறு இடங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. மாணவர்களின் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.