Categories
மாநில செய்திகள்

மீன்கள் மீது ஃபார்மலின் ரசாயனம்….. சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டில் அதிகாரிகள் திடீர் சோதனை!

மதுரை கரிமேடு மீன் சந்தையில் ஃபார்மலின் தடவப்பட்ட மீன்கள் டன் கணக்கில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மீன் மார்க்கெட்டில் மீன்களில் பிணங்களை பதப்படுத்த கூடிய ஃபார்மலின் என்ற ரசாயனத்தை வைத்து பதப்படுத்தி வைத்து இருந்தது நேற்று முன்தினம் பெரிய அளவில் தமிழகம் முழுவதும் ஒரு அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.

உணவு பாதுகாப்பு துறையினர் இதனை கைப்பற்றினார்கள். அதிகமான மீன்களை டன் கணக்குகளில் ரசாயனம் மூலம் பதப்படுத்தி வைத்து இருந்தது மீன் பிரியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. கடோலோர மாவட்டங்களில் இருந்து உள்தமிழக மாவட்டங்களான திருச்சி, மதுரை, கோவை போன்ற மாவட்டங்களுக்கு கொண்டு செல்லும்போது நாள் கணக்கில், வாரக்கணக்கில் பயன்படுத்துவதற்காக இந்த ஃபார்மலின் போன்ற ராசியானங்களை பயன்படுத்திகிறார்கள்.

இது போன்ற ரசாயனக்களை பயன் படுத்துவதால் பலவிதமான விளைவுகள் மற்றும் உடல் நல கோளாறுகள் ஏற்படுகின்றன. மதுரை கரிமேடு மீன் சந்தையில் டன் கணக்கில் ஃபார்மலின் தடவப்பட்ட மீன்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் இதன் எதிரொலியாக தொடர்ந்து சென்னையில் காசிமேடு, பட்டினம்பாக்கம், செந்ததிப்பேட்டை, மற்றும் சைதாப்பேட்டை போன்ற மீன் மார்கெட்டுகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மூலம் சோதனைகள் நடைபெற்றன. இந்த சோதனையானது அடுத்த சிலநாட்களும் தொடரும் என உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |