Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்…. பெரும் பரபரப்பு…!!!!

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியத்தில் கீழ்வணக்கம்பாடி ஊராட்சி அமைந்துள்ளது. இதன் ஊராட்சி மன்ற தலைவராக எஸ் குமார் என்பவர் இருக்கின்றார் இந்த ஊராட்சியில் உள்ள ஏரி பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதனால் ஏரி நீரை பயன்படுத்தும் போது பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகிறது. மேலும் கழிவுநீர் கால்வாய்கள் சீரமைக்கப்படாமல் இருப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டிருக்கிறது. அதனால் அங்குள்ள பல ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டியிருக்கிறது. இதுபோன்ற குறைகளை நிவர்த்தி செய்யாமல் ஊராட்சி நிர்வாகம் சீர் கெட்டு போய் இருப்பதாக மக்கள் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றனர்.

மேலும் அரசு வளர்ச்சி பணி செய்வதற்காக ஒடுக்கப்படும் இடத்தை ஊராட்சி மன்ற தலைவர் நிராகரித்துவிட்டு வேறு இடத்தில் தனிச்சையாக கால்வாய் கட்டுதல் போன்ற பணிகள் செய்வதாகவும், தகுதியானவர்களுக்கு அரசு விடு வழங்குவதை புறக்கணித்து வருவதாகவும் ஊராட்சி மன்ற தலைவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை பொதுமக்கள் முன் வைத்திருக்கின்றனர். இந்த சூழலில் கிராம சபை கூட்டம் இன்று அதிகாலை 10 மணிக்கு தொடங்கியுள்ளது. அப்போது கீழ்வணக்கம்பாடி ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து ஒரு சிலர் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்துள்ளனர். அப்போது அவர்கள் ஊராட்சி மன்ற தலைவர் பதவி விலக வேண்டும் என கூச்சலிட்டிருக்கின்றனர்.

இதனை அடுத்து கருப்பு பேட்ஜ் அணிந்தவர்கள் ஊராட்சி மன்றத்தில் கொடுக்கப்படும் கோரிக்கை மனுக்கள் தீர்மானங்கள் நிறைவேற்றப்படுவதில்லை என குற்றச்சாட்டுகளை சுட்டிக்காட்டி பேசி உள்ளனர் இதனால் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து கிராம சபை கூட்டத்தை நடத்த முடியவில்லை அதனை தொடர்ந்து அணிந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு இருக்கின்றனர். இந்த நிலையில் இது பற்றி தகவல் அறிந்த தண்டராம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் போலீஸில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளனர். இதனை எடுத்து கிராம சபை கூட்டம் பகல் ஒரு மணி அளவில் முடிந்து அடைந்துள்ளது.

மேலும் இந்த சம்பவம் பற்றி வட்டார வளர்ச்சி அலுவலர் மகாதேவனிடம் கேட்டபோது தற்போது தான் ஊராட்சிகளுக்கு நிதி வந்திருக்கிறது படிப்படியாக பொதுமக்கள் பிரச்சினைகள் தீர்க்கப்படும் ஒதுக்கப்பட்ட இடத்தை விட்டு வேறு இடத்தில் கால்வாய் பணி நடைபெறுவது உண்மைதான். ஆனால் அதனை நிறுத்திவிட்டு பொதுமக்கள் கோரிக்கை வைத்திருக்கின்ற இடத்தில் கால்வாய் கட்ட உத்தரவிடப்பட்டிருக்கிறது. மேலும் ஒரு நபருக்கு வீடு வழங்கப்படாமல் விடுபட்டு இருக்கிறது அதனை வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |