Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து.. 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு..உச்சநீதிமன்றம் மறுப்பு..!!

கடந்த ஆண்டு சிறப்பு அந்தஸ்து ஜம்மு காஷ்மீருக்கு வழங்கப்பட்டது. அதை ரத்து செய்வதற்காக வழக்குகளும் தொடரப்பட்டது. இந்த வழக்கை, 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றுவதற்கு, உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மத்திய அரசுஅரசியல் அமைப்பு சட்டப்பிரிவு 370ல் ரத்து செய்தது. இதற்கு உச்சநீதி மன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. கடும் எதிர்ப்பு கிளம்பி போராட்டக்களம் ஆனது காஷ்மீர்.

இந்த வழக்கின் மீதான தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் விசாரணையை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று  ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம், ஐக்கிய மக்கள் சுதந்திர அமைப்பு தொண்டு நிறுவனம் என பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதனை தொடர்ந்து நீதிபதி என்.வி.ரமணா தலைமையில்  5 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது இந்த வழக்கு. தாக்கல் செய்யப்பட்டவர்களின் கருத்துக்களை பற்றி நீதிபதிகள் கேட்டனர். 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு இந்த வழக்கை மாற்ற முடியாது என்று தெரிவித்துள்ளனர். இறுதியில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு தான் இந்த வழக்கைபற்றி விசாரணை மேற்கொள்வார்கள், என கூறியுள்ளனர்.

Categories

Tech |