Categories
மாநில செய்திகள்

“சென்னை வந்துட்டு ஸ்டாலினை சந்திக்காமல் செல்ல முடியுமா….?” அவர் என்னுடைய சகோதரர்…. முதல்வர் மம்தா பானர்ஜி நெகிழ்ச்சி…..!!!!

மேற்குவங்க மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி இன்று சென்னைக்கு வருகை புரிகிறார். இவர் முதல்வர் ஸ்டாலினை இன்று சந்தித்து பேச இருக்கிறார். இவர்கள் சந்திப்பு  2024-ம் ஆண்டு தேர்தலுக்கான வியூகம் என்று சொல்லப்பட்ட நிலையில், மேற்குவங்க மாநிலத்தின் ஆளுநர் இல. கணேசன் அதை மறுத்துள்ளார். அதாவது தமிழகத்தைச் சேர்ந்த இல. கணேசனின் அண்ணன் பிறந்தநாள் நாளைய தினம் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தான் முதல்வர் மம்தா பானர்ஜி சென்னைக்கு வருவதாக கூறியுள்ளார்.

ஆனால் முதல்வர் மம்தா பானர்ஜி விழாவில் கலந்து கொள்வதற்காக வந்தாலும் ஸ்டாலினை சந்தித்து பேசுவது தான் தற்போது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சென்னைக்கு வந்த முதல்வர் மம்தா பானர்ஜி ஆழ்வார்பேட்டையில் உள்ள முதல்வர் ஸ்டாலின் வீட்டுக்கு சென்றார். அந்த சந்திப்பின்போது முதல்வர் ஸ்டானினுடன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கனிமொழி போன்றோரும் உடன் இருந்தனர். அதன்பிறகு கொல்கத்தாவை சேர்ந்த பிரபலமான இனிப்புகளை முதல்வர் ஸ்டாலினுக்கு மம்தா பானர்ஜி வழங்கினார்.

இந்த சந்திப்பு முடிந்த பிறகு வீட்டில் இருந்து வெளியே வந்த முதல்வர் மம்தா பானர்ஜி செய்தியாளர்களுக்கு பேட்டி கொடுத்தார். அவர் கூறியதாவது, சென்னை வந்துவிட்டு ஸ்டாலினை சந்திக்காமல் செல்ல முடியுமா? அவர் என்னுடைய சகோதரர் போன்றவர். இது ஒரு மரியாதை நிமித்தமான சந்திப்பு. நாங்கள் அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என்று கூறியுள்ளார். மேலும் பாஜகவுக்கு எதிராக வருகிற 2024-ம் ஆண்டு தேர்தலில் புதிய வியூகம் நடத்துவது குறித்து மம்தா மற்றும் முதல்வர் ஸ்டாலின் பேசுவதாக கூறப்பட்ட நிலையில், மரியாதை நிமித்தமான சந்திப்பு மட்டுமே என மம்தா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

Categories

Tech |