திண்டுக்கல் பழனிச்சாலையில் திண்டுக்கல் மேற்கு ஒன்றிய அதிமுக கழகச் செயலாளர் ராஜசேகரன் தலைமையில் அதிமுகவின் 51 ஆம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக திண்டுக்கல் மேற்கு மாவட்ட கழகச் செயலாளர் திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளரும் திரைப்பட நடிகையுமான விந்தியா ஆகியோர்கள் கலந்து கொண்டனர். இந்த பொதுக்கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது தெய்வீக திருமகனார் முத்துராமலிங்க தேவருக்கு ஜெயலலிதா கொடுத்த தங்க கவசத்தை அணிவிப்பதற்கு நமக்கு உரிமை இல்லை என்று சொல்லி இருக்கிறார்கள்.
குறுக்கு வழியிலே அதற்கான வேலைகளை செய்திருக்கிறார் திமுகவை சேர்ந்தவர்கள், அதைப்பற்றி நாம் கவலைப்படவில்லை. ஆனால் அம்மா அவர்கள் கொடுத்த தங்க கவசத்தை இந்த முறையும் எப்படியாவது தேவர் சிலைக்கு அணைவித்திட வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி நீதிமன்றத்தில் சட்ட போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது கட்சி ஒருங்கிணைப்பாளர் என்று சொல்லிக்கொண்டு, தேவர் சிலைக்கு வெள்ளி காகசத்தை துரோகி பன்னீர்செல்வம் அணிவித்துள்ளார். நீங்கள் கொள்ளை அடித்த பணத்தில் வைர கவசத்தையை அணிவிக்கலாமே. ஏன் வெள்ளிக்கிழமை நிறுத்திக் கொண்டீர்கள். தேவர் சிலைக்கு எந்த கவசத்தை அணிவித்தாலும் அது அம்மா கொடுத்த தங்க கவசத்திற்கு ஈடாகுமா? நீங்கள் என்ன தேவரின் வாரிசா? என்று திண்டுக்கல் சீனிவாசன் ஆவேசமாக கேள்வி எழுப்பி உள்ளார்.