Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

விவசாய நிலத்திற்கு சென்ற முதியவர்…. காலால் மிதித்து கொன்ற விலங்கு…. அச்சத்தில் பொதுமக்கள்…!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள பனகமுட்லு பகுதியில் விவசாயியான பன்னியப்பன் (61) என்பவர் வசித்து வந்துள்ளார். இந்த முதியவர் வனப்பகுதியை ஒட்டி இருக்கும் தனது விவசாய நிலத்திற்கு கடந்த 24-ஆம் தேதி சென்றுள்ளார். அப்போது திடீரென வனப்பகுதியில் இருந்து வந்த காட்டு யானை முதியவரை நோக்கி ஓடி வந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த முதியவர் தப்பிக்க முயன்ற போது யானை அவரை கீழே தள்ளி காலால் மிதித்து விட்டு வனப்பகுதிக்குள் சென்றது.

இதனைத் தொடர்ந்து படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த முதியவரை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |