தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க வேண்டும் என்று ஐகோர்ட் நிர்பந்தித்தபோதும் தமிழ்நாடு அரசு பிடிவாதம் பிடிக்கிறது. நீதிமன்றத்தில் போலீஸ் தாக்கல் செய்திருக்கும் பதிலில், நவம்பர் 6ஆம் தேதி தமிழகத்தில் மூன்று இடங்களில் மட்டுமே ஊர்வலத்துக்கு அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
23 இடங்களில் உள்அரங்குகளில் நடத்திக்கொள்ளலாம் என்றும் மீதமுள்ள 24 இடங்களில் அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பல்வேறு இடங்களில் கன மழைக்கான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருப்பதால் வருவாய்துறை மற்றும் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.