Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வர் ஸ்டாலின்-மம்தா சந்திப்பு…. “பாஜகவை வீழ்த்த புதிய வியூகம்”…. தேசிய அரசியலில் எகிறும் எதிர்பார்ப்பு….!!!!

மேற்குவங்க மாநிலத்தின் முதல்வர் மம்தா பானர்ஜி இன்று சென்னைக்கு வருகை புரிகிறார். இவர் முதல்வர் ஸ்டாலின் இன்று சந்தித்து பேச இருக்கிறார். இவர்கள் சந்திப்பு  2024-ம் ஆண்டு தேர்தலுக்கான வியூகம் என்று சொல்லப்பட்ட நிலையில், மேற்குவங்க மாநிலத்தின் ஆளுநர் இல. கணேசன் அதை மறுத்துள்ளார். அதாவது தமிழகத்தைச் சேர்ந்த இல. கணேசனின் அண்ணன் பிறந்தநாள் நாளைய தினம் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக தான் முதல்வர் மம்தா பானர்ஜி சென்னைக்கு வருவதாக கூறப்பட்டுள்ளது.

ஆனால் முதல்வர் மம்தா பானர்ஜி விழாவில் கலந்து கொள்வதற்காக வந்தாலும் ஸ்டாலினை சந்தித்து பேசுவது தான் தற்போது முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பாஜகவின் ஆட்சியை கவிழ்ப்பதற்காக சந்திரசேகர் ராவ் மற்றும் நிதீஷ்குமார் ஆகியோர் முயற்சி செய்து வருகின்றனர். அதன் பிறகு காங்கிரஸ் கட்சியை பலப்படுத்துவதற்காக ராகுல் காந்தி நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.

இப்படி எதிர்க்கட்சிகள் மாறி மாறி பாஜகவை வீழ்த்துவதற்கு திட்டமிட்டாலும் சரியான தலைமை இருந்தால் மட்டுமே எதிர்கட்சிகளின் வியூகம் பலிக்கும். இந்நிலையில் முதல்வர் மம்தா பானர்ஜி தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்திக்க இருப்பது 2024-ம் ஆண்டு தேர்தலை பற்றி பேசி பாஜகவின் ஆட்சியை கவிழ்ப்பதற்காக தான் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த சந்திப்பு  தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவும் பார்க்கப்படுகிறது.

Categories

Tech |