மிஸ்கிராண்ட் சர்வதேச 2020 அழகுப் போட்டியின்போது மிஸ் அர்ஜென்டினா அழகி மரியானா வரேலாவும், மிஸ் போர்ட்டோ ரிகோ அழகி பேபியோலா வாலண்டினும் சந்தித்து கொண்டனர். இதையடுத்து அவர்கள் நண்பர்களாகி பிறகு ஒருவரை ஒருவர் விரும்ப துவங்கினர். அதன்பின் அவர்கள் இருவரும் மிகவும் நெருக்கமாக பழகிவந்தனர். லெஸ்பியன் ஜோடியாக மாறிய அவர்கள் இரண்டு பேரும் எப்போதும் ஒன்றாகவே இருந்து வந்தனர். அவர்கள் தங்களது உறவை இதுவரையிலும் ரகசியமாக வைத்திருந்தனர்.
இந்நிலையில் அவர்கள் 2 பேரும் தங்களது திருமணம் குறித்து தற்போது அறிவித்துள்ளனர். இவர்களுக்கு அக்டோபர் 28ஆம் தேதி திருமணம் நடந்தது. போர்டோ ரிகோவின் சான் ஜுவானிலுள்ள திருமணப்பதிவு அலுவலகத்திற்கு வெளியே அவர்கள் வெள்ளைநிற உடையணிந்து ஜோடியாக காணப்படுகின்றனர். இதில் மரியானா வரேலா மிஸ்யுனிவர்ஸ் 2019ல் அர்ஜென்டினா சார்பாக கலந்துகொண்டார். அதன்பின் மிஸ் கிராண்ட் இன்டர்நேஷனல் 2020 அழகி போட்டியில் முதல் 10 இடங்களுக்குள் வந்தார்.