இந்திய தபால் துறை மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்த வருகிறது. இந்த நிலையில் இந்திய தபால் துறையானது டாடா ஏஐஜி, ஜெனரல் இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்களோடு இணைந்து பத்து லட்சத்திற்கான காப்பீடு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இதில் 18 முதல் 65 வயது உடையவர்கள் இணைய தகுதி உடையவர்கள். ரூபாய் 399 இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.
இந்த திட்டத்தின் மூலமாக உயிரிழப்பு, நிரந்தர உடல் பாதிப்பு, பகுதி உடல் பாதிப்பு, பக்கவாதம் ஏற்பட்டால் பத்து லட்சம் விபத்தினால் ஏற்படும் செலவுகளுக்கு 60,000 காப்பீடு வழங்கப்படும். இத்தோடு புறநோயாளி செலவுகளுக்கு அதிகபட்சமாக 30 ஆயிரம் கிடைக்கும். விபத்தினால் மரணம், பக்கவாதம் ஏற்பட்டவர்களின் குழந்தைகளுடைய கல்வி செலவுக்காகவும் ஒரு லட்சம் வரை வழங்கப்படும். அதிகபட்சமாக இரண்டு குழந்தைகளுக்கு இந்த திட்டத்தின் மூலம் பலன் கிடைக்கும்.