வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், 2 நாட்களாக மழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், சென்னை சாலைகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வதற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு, நிவாரண பணிகள் குறித்து துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
இந்த நிலையில் சென்னை எழிலகத்தில் செயல்பட்டு வரும் பேரிடர் மேலாண்மை அவசரகால செயல்பாட்டு மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அப்போது, கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்டு பேசிய பொதுமக்களிடம் வாட்ஸ் ஆப் வீடியோ கால் மூலம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது, கவலைப்பட வேண்டாம், உங்களது புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் உறுதியளித்தார்.