Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஏ.டி.எம் எந்திரத்தில் மாயமான பணம்…. நூதன முறையில் நடந்த சம்பவம்…. காட்டி கொடுத்த சிசிடிவி காட்சிகள்….!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள சிந்தாதிரிப்பேட்டை பகுதியில் ஒரு ஏ.டி.எம் மையம் அமைந்துள்ளது. இந்நிலையில் ஏ.டி.எம் எந்திரத்தில் இருந்து 28 ஆயிரம் ரூபாயை நூதன முறையில் மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது 2 மர்ம நபர்கள் ஏ.டி.எம் எந்திரத்திற்குள் இரும்பு கம்பியை நுழைத்து ஏதோ செய்து கொண்டிருந்த காட்சிகள் பதிவாகியுள்ளது.

அவர்கள் நூதனமான முறையில் பணத்தை திருடி சென்றார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு வங்கி நிர்வாகம் சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தது. அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் அந்த மர்ம நபர்கள் யார்? என்பதை கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |