Categories
தேசிய செய்திகள்

நடப்பு நிதியாண்டில் தங்கத்தின் தேவை 14% அதிகரிப்பு… வெளியான அறிக்கை…!!!!!!

நடப்பு நிதியாண்டில் தங்கத்தின் தேவை 14 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் அறிக்கை வெளியிட்டுள்ளது.

2022 ஆம் வருடத்தின் மூன்றாம் காலாண்டின் உலகில் தங்கத்தின் தேவை தொடர்பான அறிக்கையை உலக தங்க கவுன்சில் வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 2021 – 2022 ஆம் தேதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் இந்தியாவில் தங்கத்தின் தேவை 168 டன்னாக இருந்தது. இந்த நிலையில் நடப்பு நிதி ஆண்டில் இதே காலாண்டில் இந்தியாவில் தங்கத்தின் தேவை 14% உயர்ந்து 191.7 டன்னாக அதிகரித்து இருக்கிறது. மேலும் கடந்த நிதியாண்டுடன் இதை ரூபாய் மதிப்பில் ஒப்பிட்டு பார்க்கும்போது இது 19 சதவீதம் உயர்ந்துள்ளது. அதாவது கடந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் இதன் மதிப்பு 71,630 கோடியாக இருந்தது ஆனால் தற்போது இது 19 சதவீதம் அதிகரித்து 85,010 கோடியாக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் உலக தங்க கவுன்சில் பிராந்திய தலைமை செயல் அதிகாரி பி ஆர் சோமசுந்தரம் பேசியபோது, 2022 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டு 191.7 டன்னாக உள்ள இந்தியாவின் மொத்த தங்க தேவை கடந்த வருடத்தை விட 11 சதவீதம் அதிகரித்து இருக்கிறது. இது எதிர்பார்த்ததை விட சிறந்த செயல்திறன் வலுவான நுகர்வோர் ஆர்வம் போன்றவற்றை பிரதிபலிக்கிறது. மேலும் கொரோனா தொற்றுக்கு முந்தைய காலகட்டங்களில் தங்கத்தின் தேவை இருந்ததைப் போல் தற்போதைய நிலை இருக்கிறது அதேபோல இரண்டாம் காலாண்டில் நாட்டில் தங்க நகைகளின் தேவை 17% உயர்ந்து 146.2 ஆக இருக்கிறது.

கடந்த வருடம் இதே காலகட்டத்தில் இது 125 வருடமாக இருந்தது இரண்டாம் காலாண்டு முடிவில் வங்கி கடன் வளர்ச்சி 9 வருடங்களில் இல்லாத அளவிற்கு அதிகரித்துள்ளது. மேலும் கடன் விரிவாக்கம் போன்றவை இந்த தேவைக்கு உத்வேகத்தை சேர்த்திருக்கிறது. தீபாவளி பண்டிகை நான்காம் காலாண்டில் நடைபெற இருக்கின்ற திருமண வைபவங்களால் தங்கத்தின் தேவை மேலும் அதிகரிக்கக்கூடும். மேலும் கடந்த வருடத்தை போலவே இந்த வருடத்திற்கான தங்கத்தின் தேவை 750 முதல் 800 டன் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டு இருக்கிறது. நாட்டில் 2021 இல் 13 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த வருடம் அதே அளவு இறக்குமதி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது மேலும் இந்த வருடம் இதுவரை 559 டன் தங்கம் இறக்குமதி செய்யப்பட்டிருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |