மாமன்னர் ராஜராஜ சோழன் பிறந்த நாள் இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழக அரசு முக்கியமான தமிழர்கள் அனைவரும் மகிழ்ச்சி கொள்ளக்கூடிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாள் இனி தமிழக அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். மாமன்னர் ராஜராஜ சோழனின் பிறந்த நாளான நவம்பர் 3ஆம் நாள் ஆண்டுதோறும் தஞ்சாவூர் மாவட்டத்தில் சதய விழாவாக பல்வேறு அமைப்புகளால் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில் தஞ்சையில் மாமன்னர் ராஜராஜன் சோழன் பிறந்த நாளான நவம்பர் மூன்றாம் தேதி நடக்கும் சதய விழா இனி அரசு விழாவை கொண்டாடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இனி அரசு விழாவாக கொண்டாடும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சித் தலைவர்கள் தொடர்ந்து நீண்ட நாள் கோரிக்கையாக இதனை வைத்து வந்தனர். இதனை பரீசிலித்து இந்த அறிவிப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் தஞ்சையில் உள்ள மாமன்னர் ராஜராஜ சோழன் மணிமண்டபம் மேம்படுத்தி பொலிவூட்டப்படும் எனவும்அறிவிக்கப்பட்டுள்ளது.