தன் அடுத்த திரைப்படத்தின் புரமோஷனுக்காக கிரிக்கெட் விளையாடிய கத்ரீனாவின் வீடியோவானது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்தாதுன் படம் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, கத்ரீனா கைஃப் இணைந்து நடிக்கும் திரைப்படம் “மெரி கிரிஸ்துமஸ்” ஆகும். ஸ்ரீராம் ராகவன் இயக்கும் படம் என்பதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. இப்படத்தில் ராதிகா சரத்குமார், சஞ்சய் கபூர், தினு ஆன்ந்த உட்பட பல பேர் நடித்து இருக்கின்றனர். விஜய்சேதுபதி, கத்ரீனா கைஃப் இணைந்து நடித்த ஹிந்தி திரைப்படத்தின் ரிலீஸ் தேதியானது மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
View this post on Instagram
இந்த நிலையில் இஷான், சதுர்வேதி போன்றோருடன் கத்ரீனா நடித்த “போன் பூத்” எனும் ஹிந்தி திரைப்படத்தின் புரமோஷனுக்காக கிரிக்கெட் விளையாடியுள்ளார். குர்மீத் சிங் இயக்கிய இப்படம் வரும் மாதம் 4ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. டி20 உலகக்கோப்பை இந்தியா தென் ஆப்பிரிக்காவுக்கான (அக்.30) போட்டியின்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலுவலகத்தில் முன்னாள் வீரர் ஹர்பஜன் பந்து வீச கத்ரீனா க்யூட்டாக கிரிக்கெட் ஆடினார். இந்த விடியோவானது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.