பிரபலமான தனியார் தொலைக்காட்சியில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே தனலட்சுமி மற்றும் ஜிபி முத்துவுக்கு இடையே மோதல் தொடங்கியது. அதன் பின் சாந்தி, அசல் ஆகியோர் எலிமினேட் செய்யப்பட்ட நிலையில், ஜி.பி முத்து தானாகவே முன்வந்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். ஜி.பி முத்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய நிலையில் புதிதாக தனலட்சுமி மற்றும் அசீம் ஆகியோருக்கு இடையே மோதல் தொடங்கியது.
இதனால் கமல் அசீமை எச்சரித்தார். இந்நிலையில் புதிதாக தற்போது தனலட்சுமி மற்றும் ராபர்ட் மாஸ்டர் ஆகியோருக்கு இடையே மோதல் தொடங்கியுள்ளது. இது தொடர்பான ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதன்படி தனலட்சுமி மெத்தையில் படுத்து தூங்க வேண்டும் என்று சொல்கிறார். ஆனால் ராபர்ட் மாஸ்டர் தூங்க வேண்டாம் நாய் குறைக்கும் என்கிறார்.
உடனே தனலட்சுமி அதை நீங்க சொல்லாதீங்க. நான் சாப்பிடறது மற்றும் தூங்குவது என எல்லாத்தையும் யாரும் பாத்துட்டு இருக்காதீங்க என்று கூறினார். உடனே ராபர்ட் மாஸ்டர் நீ யாரை சொன்ன. செருப்பால அடிப்பேன் என்று கூறி வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். உடனே சக போட்டியாளர்கள் வந்து சண்டையை நிறுத்துகிறார்கள். மேலும் இது தொடர்பான ப்ரோமோ வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
https://twitter.com/BBFollower7/status/1587163346184581120?s=20&t=Tc2EMUpL9qXwuosjYkQ4yA