தடகள போட்டியில் சாதனை படைத்த அரசு பள்ளி மாணவனை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.
கரூர் மாவட்டத்திலுள்ள கவுண்டம்பாளையம் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இங்கு மாவட்ட அளவிலான தடகள போட்டி நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் மாவட்டத்தில் இருக்கும் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் தோட்டக்குறிச்சி அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர் விஷ்ணு உயரம் தாண்டுதல் போட்டியில் கலந்து கொண்டார். இவர் மாவட்ட அளவில் 2-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இந்த மாணவனுக்கு தோட்டக்குறிச்சி பேரூராட்சி தலைவர் ரூபா, பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.