சென்னையில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அண்ணாமலை கைது செய்யப் பட்டுள்ளார். பாஜக மகளிர் நிர்வாகிகளான குஷ்பூ, கௌதமி குறித்து ஆபாசமாக பேசியதாக திமுக நிர்வாகி சாதிக் மீது புகார் எழுந்தது. இதையடுத்து சாதிக்கை கைது செய்யக்கோரி அண்ணாமலை தலைமையில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதில் தமிழக பாஜக தவைலர் அண்ணாமலையும் பங்கேற்றார். இந்நிலையில் இந்த போராட்டம் தடையை மீறி நடந்ததாக கூறி தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜகவினர் கைது செய்யப்பட்டனர்.