Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்….!! இந்த நிறுவனங்களை நம்ப வேண்டாம்…. போலீசாரின் எச்சரிக்கை…!!!

ஈரோடு பொருளாதார குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு ரகுபதியின் உத்தரவின்படி, ஜவுளிசந்தை, பன்னீர்செல்வம் பூங்கா, ஈரோடு பேருந்து நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீசார் துண்டு பிரசுரங்கள் வழங்கியுள்ளனர். அதில் மோசடி நிதி நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்து ஏமாற வேண்டாம் என்ற வாசகங்கள் அடங்கியுள்ளது. மேலும் ஈமு கோழி, நாட்டுக்கோழி வளர்ப்பு, ஆடு வளர்ப்பு திட்டம், மாதத் தவணையில் வீடு மற்றும் மனை வாங்கும் திட்டம், அங்கீகாரம் பெறாத நிறுவனங்களின் தங்க நகை சேமிப்பு திட்டம் போன்ற விளம்பரங்களை பார்த்து பொதுமக்கள் ஏமாறக்கூடாது என போலீசார் அறிவுரை வழங்கியுள்ளனர்.

அதிகமாக வருமானம் கிடைக்கும் என்ற வாக்குறுதிகளை நம்பி மோசடி நிறுவனங்களில் பணத்தை முதலீடு செய்து பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என போலீசார் கூறியுள்ளனர். இந்நிலையில் அதிகாரப்பூர்வமில்லாத நிதி நிறுவனங்கள் மற்றும் பணசுழற்சி திட்டங்களை நடத்துவோர் பற்றி அறிந்தால் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலோ அல்லது ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தின் 04242256700 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம்.

Categories

Tech |