Categories
தேசிய செய்திகள்

குஜராத் தொங்கு பாலம் விபத்து…. உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு தொகை…. வெளியான அறிவிப்பு….!!!

குஜராத் மோர்பி நகரில் தொங்கு பாலம் உள்ளது. இந்தப் பாலத்தில் தனியார் நிறுவனம் கடந்த 6மாதங்களாக புனரமைப்பு பணிகளை மேற்கொண்டு வந்தது. இதனால் பாலம் மூடப்பட்டிருந்தது. இதனையடுத்து பாலம் புனரமைப்பு பணிகள் கடந்த அக்டோபர் 26 ஆம் தேதி திறக்கப்பட்டது. அந்த பாலத்தில் கடந்த 30 ஆம்‌ தேதி மக்கள் கூட்டம் அலைமோதியது. ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகமானோர் பாலத்துக்கு வந்திருந்தனர். பொதுமக்களின் எடை தாங்காமல் தொங்கு பாலம் மாலை அறுந்து விழுந்தது.

இந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். அதுமட்டுமில்லாமல் பலர் மீட்கப்பட்டும், சிலர் சிகிச்சையில் உள்ளனர். மீட்பு நிவாரணம் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டதை போல மாநில அரசு மற்றும் பிரதமர் நிவாரண நிதியிலிருந்து ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்பட்டுள்ளது. மேலும் இன்னும் 17 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்

Categories

Tech |