Categories
மாநில செய்திகள்

“இருப்பதை பறிப்பது தான் திராவிட மாடலா”…. திமுக மௌனம் காப்பது ஏன்….? முதல்வருக்கு ஓபிஎஸ் கோரிக்கை….!!!!!

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் அதிமுக கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ. பன்னீர்செல்வம் ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப் படியை 38 சதவீதம் வரை உயர்த்தி வணங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து ஓபிஎஸ் டுவிட்டரில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இடையே பாலமாக இருப்பவர்கள் அரசு ஊழியர்கள். ஒரு மனிதனை மனிதன் என்று அடையாளப்படுத்தி கல்வியையும் ஒழுக்கத்தையும் போதிப்பவர்கள் ஆசிரியர்கள். இப்படி பொறுப்பு மிக்க பணியில் இருக்கும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு திமுக அரசு அகவிலை படியை வழங்காமல் காலம் தாழ்த்தி வருவதை திமுக அரசு வாடிக்கையாக வைத்துள்ளது.

விலைவாசி உயரும்போதெல்லாம் மக்களின் வாங்கும் சக்தி குறைகிறது. இந்த விலைவாசி வியர்வை கருத்தில் கொண்டு தான் அகவிலை படியானது வழங்கப்படுகிறது. இதைக் கூட வழங்காமல் காலம் தாழ்த்துவது மிகவும் வேதனைக்குரிய விஷயமாகும். மத்திய அரசு எப்போதெல்லாம் அகவிலைப்படி உயர்த்துகிறதோ அதே தேதியில் தமிழக அரசு அகவிலை படியை உயர்த்தி வழங்குவது வழக்கம். ஆனால் அரசு ஊழியர்களை நண்பன் என்று சொல்லிக் கொள்ளும் திமுகவோ ஒன்றரை வருடங்களாக அவர்களை வஞ்சித்து வருகிறது. மத்திய அரசாங்கத்தில் அகவிலைப்படி உயர்த்தி வழங்கி வரும்போது நிதியை காரணம் காட்டி தமிழக அரசானது அகவிலைப்படியை உயர்த்துவதில்லை. ஒருவேளை இருப்பதை பறிப்போம் என்பதுதான் திராவிட மாடல் போலும். மத்திய அரசு சமீபத்தில் 34 சதவீதம் இருந்தால் அகவிலைப்படியை 38 சதவீதமாக அதிகரித்துள்ளது.

இந்த அறிவிப்பு வெளியாகி ஒரு மாதம் ஆகும் நிலையில் திமுக வழக்கம்போல் வாய்மூடி மவுனியாக இருக்கிறது. இரண்டு முறை ஆறு மாத காலத்திற்கு அகவிலைப்படி தள்ளி வைத்த திமுக அரசு தீபாவளி பண்டிகையின் போது 4 விழுக்காடு அகவிலைப்படியை ரொக்கமாக வழங்கும் என அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த நிலையில் அவர்களுக்கு ஏமாற்றம் மட்டுமே மிஞ்சியது. ஆட்சியில் அமர்ந்து ஒரு வருடம் தாண்டியும் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலை படியை உயர்த்தி வழங்காதது கண்டனத்திற்குரியது. மேலும் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் உடனடியாக தலையிட்டு 4 சதவீத அகவிலைப்படையை அதாவது 34 சதவீதத்திலிருந்து 38 சதவிதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |