Categories
பல்சுவை

உங்களுக்கு Netflix app உள்ளே “Secret codes” தெரியுமா?…. இதை வைத்து பல விஷயங்கள் செய்ய முடியும்….!!!

உலகில் உள்ள மக்கள் பலர் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரியஸ் ஆகியவற்றை இன்று Netflix app பார்த்து ரசித்து வருகின்றனர். இந்த strieaming app மூலம் மக்கள் பலவகையான திரைப்படங்கள் கண்டுக்களிக்கின்றனர். இதற்கு முன்பெல்லாம் ஆங்கில படங்களை மட்டுமே பார்த்து வந்த மக்கள் தற்போது இந்த Netflix app காரணமாக கொரியர் மற்றும் ஐரோப்பிய திரைப்படங்களை பார்த்து வருகின்றனர். ஆனால் இதில் சில ரகசிய வழிகள் உள்ளது. இதை வைத்து நாம் நமக்கு தேவையான திரைப்படங்களை கண்டு ரசிக்க முடியும். இதன் வழிகள் பற்றி இங்கு பார்ப்போம். அதாவது Netflix code என்பது எண்களை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. எடுத்துக்காட்டாக ஹாரர் திரைப்படங்களை பார்க்க விரும்பும் மக்கள் நேரடியாக தேடினால் ஏற்கனவே பார்த்த திரைப்படங்கள் மற்றும் உலகில் அதிக பார்க்கப்படும் திகில் திரைப்படங்கள் மட்டுமே நம்ம காட்டும்.

ஆனால் அதற்கு பதிலாக small town scares(81496215) என்று தேடினால் நீங்கள் எதிர்பார்க்கும் திகில் திரைப்படங்களை பார்க்கலாம். அதனை போல 36 ஆயிரம் கோட் உள்ளது. இதனை நாம் Netflix வலைதளத்தில் மட்டுமே பயன்படுத்த முடியும். இதனை வைத்து netflix app உள்ளே தேட முடியாது. அதனைத் தொடர்ந்து இந்த கோட் என்ன என்று தெரிந்து கொள்ள Netflix COdes.com என்று சென்று தேடலாம். இதில் 20 வகைகளில் திரைப்படங்கள் பிரித்து வைக்கப்பட்டுள்ளது. அதில் அனிமேஷன், வெளிநாட்டு திரைப்படங்கள், கிளாசிக் திரைப்படங்கள் போன்றவை உள்ளது. இதனையடுத்து இதில் மிகவும் எளிமையான வழி என்னவென்றால் Netflix extension ஒன்றை நமது கூகுள் குரோம் உள்ளே வைத்துக் கொள்ளவும். அதன் பிறகு

  • Google Chrome Web store சென்று ‘Better Browse For Netflix’.
  • பின்னர் Add to Chrome.
  • Add Extension கிளிக் செய்யவும்
  • பின்னர் புதிய டேப் திறந்து Netflix Account உள்ளே செல்லவும்.

Categories

Tech |