Categories
மாநில செய்திகள்

நாமக்கல் ரயில் பயணிகளுக்கு செம ஹேப்பி நியூஸ்… தெற்கு ரயில்வே வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு…..!!!

தெற்கு ரயில்வேயின சேலம் கோட்டம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில், மைசூர்-மயிலாடுதுறை சிறப்பு ரயில் 18ஆம் தேதி வரை வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்படும். மைசூரில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 11:45 மணிக்கு புறப்பட்டு மறுநாள் பிற்பகல் 3:30 மணிக்கு மயிலாடுதுறை வந்தடையும். மறு மார்க்கத்தில் மயிலாடுதுறை-மைசூர் சிறப்பு ரயில் நவம்பர் 19ஆம் தேதி வரை சனிக்கிழமைகளில் இயக்கப்படும். மயிலாடுதுறையில் சனிக்கிழமை மாலை 6:45 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 12 மணிக்கு மைசூரை சென்றடையும். இந்த ரயில் ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம் வழியாக இயக்கப்படும்.

அதனைப் போல மைசூரில் இருந்து தூத்துக்குடிக்கு தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல் வழியாக சிறப்பு ரயில் இயக்கப்படும். அவரைத் தொடர்ந்து மைசூர்-தூத்துக்குடி சிறப்பு ரயில் நவம்பர் 4, 11, 18 ஆகிய தேதிகளில் வெள்ளிக்கிழமைகளில் இயக்கப்பட உள்ளது. சிறப்பு ரயில் மைசூரிலிருந்து வெள்ளிக்கிழமை பகல் 120.5 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5 மணிக்கு தூத்துக்குடி வந்தடையும். மறு மார்க்கத்தில் தூத்துக்குடி-மைசூர் சிறப்பு ரயில் நவம்பர் 5, 12, 19 ஆகிய தேதிகளை சனிக்கிழமைகளில் இயக்கப்படும். தூத்துக்குடியில் சனிக்கிழமை மாலை 3:30 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 8:30 மணிக்கு மைசூரை வந்தடையும். இந்த ரயில்கள் யெலியூர், மாண்டியா, பெங்களூர், ஓசூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையத்தில் நின்று செல்லும். இந்த ரயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டு அடுக்கு படுக்கை வசதி பெட்டி, 3 குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 10 2 ஆம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 2 மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு பட்டிகள் இணைக்கப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

Categories

Tech |