டெல்லி நரேலா தொழிற்பேட்டை பகுதியில் உள்ள காலனி தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ வேகமாக பரவியதால் 10 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் இதுவரை மூன்று பேர் மீட்கப்பட்டிருக்கின்ற நிலையில் இன்னும் சிலர் உள்ளே சிக்கி இருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என டெல்லி தீயணைப்பு சேவை மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தீ விபத்தில் பெரிய அளவில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை ஒரு சிலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். அவர்கள் அனைவரும் நலமாக இருக்கின்றனர் எனவும் அவர்களுக்கு சிறிய காயங்கள் மட்டுமே ஏற்பட்டுள்ளதாக டெல்லி போலீஸ் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த தீ விபத்திற்கான காரணம் என்ன என்பது பற்றி போலீஸர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தீ விபத்தில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்ததாக அவர்கள் அடையாளம் கண்டறியப்பட்டிருப்பதாக டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.