Categories
டெக்னாலஜி

பாஸ்வேர்ட் பகிர்வதை தடுக்க…. நெட்பிளிக்ஸ் போடும் பிளான்…. வெளியான சூப்பர் தகவல்…..!!!!!

பிரபல ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ் அண்மையில் “Profile Transfer” வசதியை இந்தியாவிலும் அறிமுகப்படுத்தியது. இதன் வாயிலாக Netflix பாஸ்வேர்டு பகிர்வதை தடுக்கஇயலும். இச்சேவை Netflix வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டு இருக்கிறது. அனைவராலும் வேண்டப்பட்ட இந்த “Profile Transfer” வசதி, நெட்பிளிக்ஸில் நீங்கள் பார்த்தவை குறித்த தகவல்கள், பார்க்க நினைத்து குறித்துவைத்தவை, சேமித்து வைக்கப்பட்ட கேம்கள் மற்றும் சிலவற்றை பகிர்ந்து கொள்ளலாம்.

நீங்கள் தனியாக கட்டணம் செலுத்தி புதுகணக்கை துவங்கும்போது, பழையக் கணக்கில் உள்ள உங்களின் தகவல்களை அவற்றில் மாற்றிக்கொள்ளமுடியும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது என நெட்பிளிக்ஸ் அறிவித்து உள்ளது. இருப்பினும் உங்களின் பணப்பரிவர்த்தனை தகவலையோ (அ) குழந்தைகள் கணக்கின் தகவலையோ பகிர்ந்துகொள்ள முடியாது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நெட்பிளிக்ஸ் வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கில் உள்நுழையும்போது, ஆப்ஸ் மற்றும் இணையத்தில் “Profile Transfer” வசதியை தடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனிடையில் வீடியோவிற்கு இடையே விளம்பரத்தையும் ஒளிபரப்ப நெட்பிளிக்ஸ் திட்டமிட்டு உள்ளது. சில நாடுகளில் அடிப்படைதொகை செலுத்தும் வாடிக்கையாளர்களின் கணக்குகளில் விளம்பரங்களை வருகிற 3ம் தேதி முதல் ஒளிபரப்படும் என தெரிவித்துள்ளது. அத்துடன் 2023ம் வருடம் தொடக்கத்தில் பாஸ்வேர்ட் பகிர்வதை ஒட்டு மொத்தமாக தடுப்பதற்கு திட்டமிட்டு இருப்பதாக நெட்ஃபிக்ஸ் அண்மையில் அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |