Categories
மாநில செய்திகள்

மக்களே இனி…. ரூ.2000 பில் வந்தால் மின்கட்டணம் முறையில் மாற்றம்?…. தமிழகத்தில் புதிய அதிரடி…..!!!!

தமிழகத்தில் மின்துறை அலுவலகத்தில் நேரடியாக மின் கட்டணம் செலுத்தும் அதிகபட்ச கட்டண வரம்பு ஐந்தாயிரம் ரூபாயில் இருந்து 2000 ரூபாயாக குறைப்பதற்கு தமிழ்நாடு மின்வாரியம் தற்போது முடிவு செய்துள்ளது.இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மின் நுகர்வோர்களிடம் மின் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகின்றது.அதில் ஐந்தாயிரம் ரூபாய்க்கு மேல் மின் கட்டணம் செலுத்துபவர்கள் ஆன்லைன் மூலமாகவும் இதர நுகர்வோர்கள் ஆன்லைன் மட்டும் இன்றி நேரடியாக மின்துறை அலுவலகங்களிலும் மின் கட்டணம் செலுத்தும் நடைமுறை தற்போது உள்ளது.

இந்நிலையில் மின்வாரிய அலுவலகங்களில் பனைச் சுமையை குறைக்கும் நோக்கத்தில் மின்வாரிய அலுவலகங்களில் மின் நுகர்வோர்களால் கட்டக்கூடிய அதிகபட்ச கட்டணம் என்பது ஐந்தாயிரம் ரூபாயில் இருந்து தற்போது 2000 ரூபாயாக குறைக்கப்பட உள்ளது. அதன்படி இரண்டாயிரத்திற்கு அதிகமாக இனி மின்கட்டணம் வருபவர்கள் நேரடியாக அலுவலகம் சென்று மின்கட்டணம் செலுத்த முடியாத நிலை ஏற்படும். ஆன்லைனில் மட்டுமே செலுத்தும் முறை கொண்டு வரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |