Categories
சென்னை மாநில செய்திகள்

ஏடிஎம்மில் ஜெல் பசையை தடவி ரூ.28 லட்சம் அபேஸ்…. சென்னையில் பெரும் பரபரப்பு சம்பவம்….!!!!

சென்னை அண்ணா சாலையில் உள்ள காசினோ திரையரங்கம் எதிரே ஏடிஎம் மையம் ஒன்று உள்ளது. எப்போதும் பரபரப்பாக காணப்படும் இந்த ஏடிஎம் மையத்தில் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்காமலேயே பணம் குறைந்து வருவதைக் கண்டு அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது.இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் ஏடிஎம் மையத்தில் உள்ள இயந்திரத்தில் கம்பியில் ஜெல் போன்ற பசையை தடவி இயந்திரத்திற்குள் விட்டு பணத்தை நூதன முறையில் திருடி உள்ளன.

அதன் பிறகு தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஏடிஎம் இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி மற்றும் திரையரங்கம் அருகே பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்வதில் மர்ம கும்ப கும்பல் ஒன்று இரும்பு கம்பி ஒன்றில் ஜெல் போன்ற பசியை தடவி இயந்திரத்தில் பணம் வரும் பகுதி வழியே உள்ளே அந்த கம்பியை விட்டு பணத்தை திருடியது தெரியவந்தது. இவ்வாறு நூதன முறையில் 28,400 பணத்தை திருடி உள்ளனர். இந்த கொள்ளை ஜூலை மாதம் முதல் நடந்து வந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதனைத் தொடர்ந்து போலீசார் மர்ம கும்பலை வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

Categories

Tech |