Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“7 பேர் விடுதலை” முதல்வரிடம் மனு கொடுக்க சென்ற 2 பேர் கைது….!!

மதுரையில் எடப்பாடி பழனிசாமியிடம் மனு அளிக்க வந்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அரசு விழா ஒன்றிற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இன்று மதுரை சென்றிருந்தார். அங்கு அவரை காண ஏராளமான பொதுமக்கள் கூடியிருந்தனர். இந்நிலையில்  ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை உடனடியாக விடுதலை செய்ய கோரிய தீர்மானத்தை மீண்டும் நிறைவேற்றக் கோரி மனு ஒன்றை,

அத்துமீறி முதல்வரிடம் 7 தமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகி ஒருவரும், அவருடன் தமிழ்தேசிய பேரியக்கத்தை சேர்ந்த மற்றொருவரும் சேர்ந்து அத்துமீறி மனு கொடுக்க முயன்றனர். இதன் காரணமாக காவல்துறையினர் அவர்கள் இருவரையும் பாதுகாப்பு நடவடிக்கையில் கைது செய்தனர்.

Categories

Tech |