சேலத்தில் கார் விற்பனை செய்ததில் மோசடி நடைபெற்றதாக கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.
சேலம் மாவட்டத்தில் உள்ள அழகாபுரம் பெரிய புதூர் பகுதியை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் ஆன்லைன் விளம்பரத்தை நம்பி கோரிமேடு பகுதியைச் சேர்ந்த சுதன் என்பவரிடம் 4 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்-க்கு கார் வாங்கி இருக்கின்றார். அதற்கான ஆவணங்களையும் சுதன் கொடுத்திருக்கின்றார்.
இதனிடையே காமேஷ் என்பவர் சுரேஷ்குமாரின் வீட்டிற்குச் சென்று நீங்கள் தற்போது வாங்கிய கார் தனக்கு சொந்தமானது என கூறி அதை எடுத்துச் சென்றுள்ளார். இதை தொடர்ந்து சுரேஷ்குமார், தன்னிடம் போலி ஆவணங்களை கொடுத்து சுதன் ஏமாற்றியதை உணர்ந்து காவல் நிலையத்தில் புகார் கொடுத்து இருக்கின்றார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.