ஆண்டிப்பட்டி அருகே தேவர் ஜெயந்தி முன்னிட்டு இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டிப்பட்டி அருகே உள்ள க.விலக்கு பகுதியில் தேவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டதை முன்னிட்டு முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக ஏராளமான பொதுமக்கள் கூடியுள்ளனர். அப்போது க.விலக்கு, முத்தனம் பட்டி, ராகுகாரன்பட்டி, பெருமாள் கோவில் பட்டி, கரட்டுபட்டு மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் கூட்டம் கூட்டமாக மேளதாளம், பட்டாசு வெடித்தபடி ஊர்வலமாக சென்றுள்ளனர். இதனால் தேனி, மதுரை சாலை இடையே ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
மேலும் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் தலைக்கு மேல் பட்டாசுகளை டித்த படியும் சிலம்பாட்டம் ஆடியும் வந்திருக்கின்றனர். அப்போது சாலையில் வந்த பேருந்தை மறுத்து அதில் ஏறி நின்று கூச்சலிட்டிருகின்றனர் இதனால் பேருந்தில் அமர்ந்திருந்த பயணிகள் அச்சமடைந்துள்ளனர். இதனை அடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இரு தரப்பினர் இடையே திடீர் மோதல் ஏற்பட்டுள்ளதால் அவர்களை கட்டுப்படுத்த முயற்சி செய்த போலீசார் வாலிபர்கள் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு தகராறாக மாறி உள்ளது. அதன் பின் தகராறில் ஈடுபட்டவர்களை போலீசார் அப்புறப்படுத்தியுள்ளனர் இந்த சம்பவத்தினால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.