இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி டி20 உலக கோப்பையில் தென் ஆப்பிரிக்காக்கு எதிரான தோல்விக்கு பிறகு தங்கியிருந்த ஓட்டல் அறைக்கு வந்தார். அப்போது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது விராட் கோலி இல்லாத சமயத்தில் அவர் தங்கி இருந்த ஹோட்டல் அறையை யாரோ ரகசியமாக வீடியோ எடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக வருகிறது.
இதற்கு அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். ஹோட்டல் அறையில் தன்னுடைய தனிப்பட்ட விஷயங்களை வீடியோ பதிவு செய்தது தன்னை காயப்படுத்தி உள்ளதாக கூறினார். மேலும் ஒவ்வொருவரும் மற்றவர்களின் தனிப்பட்ட தனி உரிமையை மதிக்குமாறு கேட்டு கொள்ளப்படுவதாக கூறினார். இந்த நிலையில் விராட் கோலியின் மனைவி இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சில ரசிகர்கள், கருணையோ, இரக்கமோ இல்லாமல் செய்த சில செயல்களை கடந்த காலத்தில் நானும் பார்த்துள்ளேன். சுய கட்டுப்பாடு மிகவும் அவசியம். உங்களது படுக்கை அறையில் இது போன்று மற்றவர்கள் நுழைந்தார் எப்படி இருக்கும்? என்று எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.