Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வால்பாறையில் விழிப்புணர்வு…. “சுற்றுலா பயணிகளுக்கு எடுத்துரைத்த போலீசார்”…!!!!!

வால்பாறையில் சுற்றுலா பயணிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள வால்பாறை, காடம்பாறை, முடீஸ், சேக்கல்முடி உள்ளிட்ட பகுதிகளில் போலீஸ் சார்பாக போதை பொருள் தடுப்பு மற்றும் விபத்து தடுப்பு குறித்து நாள்தோறும் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றார்கள். இதனால் காவல்துறை சார்பாக சுற்றுலா பயணிகளிடையே கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்யக்கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதற்கு இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமை தாங்கி முகாமை நடத்தினார். பின் விபத்து குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Categories

Tech |