பிரபல நாட்டில் உயிரிழந்த பெண்ணின் வீட்டிற்கு முன்னாள் பிரதமர் நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளார்.
பாகிஸ்தான் நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதை தொடங்கு பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தது. இதனை தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிலையில் ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக பொறுப்பேற்றுள்ளதை ஏற்க மறுத்து வரும் இம்ரான் கான் தனது ஆட்சி கவிழ்ப்பில் வெளிநாட்டு சதி இருப்பதாக கூறி வருகிறார். மேலும் பல அமைப்புகளுடன் சேர்ந்து போராட்டம் நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று இம்ரான் கான் தலைமையில் பிரம்மாண்ட பேரணி நடைபெற்றது. இந்த பேரணிக்காக பயன்படுத்தி வரும் கண்டெய்னர் லாரி வாகனத்தில் இம்ரான் கான் பயணித்து பேரணியில் பங்கேற்றார். மேலும் ஆயிரக்கணக்கானோர் இதில் கலந்துகொண்டனர். இந்த பேரணி நிகழ்வுகளை பல்வேறு செய்தி நிறுவனங்களின் பத்திரிகையாளர்கள் செய்தி சேகரித்தனர். அதேபோல் பிரபல சேனல் 5 செய்தி நிறுவனத்தின் பெண் பத்திரிக்கையாளரான சடாப் நயீம் செய்தி சேகரித்தார். அப்போது எதிர்பாராத விதமாக அவர் இம்ரான் கான் பயணித்த கண்டெய்னர் லாரி வாகன சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டார்.
இந்நிலையில் இம்ரான் கான் பயணித்த கண்டெய்னர் லாரி மீது ஏற முயன்ற போது தவறி கீழே விழுந்து வாகனத்தின் டயரில் சிக்கி அவர் உயிரிழந்ததாக டான் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தனது வாகனத்தில் சிக்கி பெண் பத்திரிக்கையாளர் உயிரிழந்ததை தொடர்ந்து இம்ரான்கான் பேரணியை ஒத்தி வைத்தார். மேலும் உயிரிழந்த பெண் பத்திரிக்கையாளரின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றது. மேலும் தனது வாகனத்தில் சிக்கி பெண் பத்திரிக்கையாளர் சடாப் நயீமின் வீட்டிற்கு இம்ரான் கான் இன்று நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார். மேலும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.