Categories
தேசிய செய்திகள்

“குஜராத்தில் தொங்கு பாலம் இடிந்து விபத்து”…. உயிர் பிழைத்தவரின் பரபரப்பு பேட்டி….!!!!

குஜராத் மாநிலம் மோர்பி நகரில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒரு தொங்கு பாலம் அமைந்துள்ளது. இந்த பாலத்தின் சீரமைப்பு பணிகள் நடைபெற்ற நிலையில் கடந்த 26-ம் தேதி மீண்டும் பயன்பாட்டுக்கு வந்தது. அதன்பிறகு நேற்று சத் பூஜை செய்வதற்காக ஏராளமான மக்கள் பாலத்தின் மீது ஏறி உள்ளனர். அப்போது திடீரென பாலம் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் 140-க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

அதன் பின் 177 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரஷ்யா, அமெரிக்கா, சவுதி அரேபியா, நேபாளம் மற்றும் சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் இரங்கல் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அஸ்வின் மெஹ்ரா என்பவர் தற்போது பேட்டி கொடுத்துள்ளார். அவர் கூறியதாவது, பாலம் இடிந்து விழுவதற்கு முன்பாக 20 குறும்புக்கார குழந்தைகள் பாலத்தை கயிறைப் பிடித்து இழுத்து ஆட்டிய போது ஏதோ சத்தம் கேட்டது. நான் அருகில் இருந்த ஒரு மரக்கிளையை பிடித்துக் கொண்டு தப்பிவிட்டேன். என்னுடன் வந்த என்னுடைய நண்பரும் தப்பிவிட்டார் என்று கூறியுள்ளார். மேலும் அஸ்வினுக்கு விபத்தில் முதுகு மற்றும் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |