Categories
மாநில செய்திகள்

வேற லெவல் அறிவிப்பு!!… இனி தமிழ் மொழியிலேயே MBBS படிக்கலாம்…. அமைச்சர் தகவல்….!!!!

 தமிழ் வழியில் மருத்துவ படிப்பு தொடங்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 32 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் நவீன மருந்து உபகரணங்கள் மற்றும் பெண்களுக்கான சிறப்பு சிகிச்சை மையங்கள் அமைக்கப்பட்டது. இதனை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். அதன் பின்னர் ஸ்டாலின் மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனை மையத்திற்கான இணையதளத்தையும் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய  அவர் கூறியதாவது. நமது தமிழ்நாட்டில் தமிழ் வழியில் மருத்துவக் கல்லூரி துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழில் மருத்துவ படிப்புக்கான முதலாம் ஆண்டு பாடத் திட்டம்  மொழிபெயர்ப்பு பணிகள்  நடந்து வருகிறது. அதன்படி 6 புதிய மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி கிடைத்தவுடன் பணிகள் தொடங்கப்படும் எனக் கூறியுள்ளார். இந்நிலையில் தமிழ்நாட்டில் பொருளியல் படிப்புகள் தமிழ் வழியில் கற்பிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |