Categories
சினிமா தமிழ் சினிமா

“நீ விரைவில் குணமடைந்து திரும்புவாய்”….‌ கொடிய நோயால் பாதிக்கப்பட்ட சமந்தாவுக்கு ஆறுதல் சொன்ன நடிகை கீர்த்தி…..!!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. இவர் தற்போது அரிய வகை தசை அலர்ஜி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் சமந்தா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது திரை உலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நடிகை சமந்தா தான் கொடிய நோயினால் பாதிக்கப் பட்டுள்ளதாகவும், மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி கஷ்டப்படுகிறேன் என்றும் கூறியுள்ளார்.

இந்நிலையில் நடிகை சமந்தா விரைவில் குணமடைய வேண்டும் என்று திரையுலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது  டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் சமந்தா மருத்துவமனையில் குளுக்கோஸ் ஏற்றி கொண்டிருக்கும் புகைப்படத்தை கீர்த்தி பகிர்ந்துள்ளார். அதோடு சாம் உனக்கு அதிகமான சக்தி கிடைத்து விரைவில் நீ குணமடைந்து திரும்புவாய் என்றும் பதிவிட்டுள்ளார். மேலும் நடிகை கீர்த்தியும் சமந்தாவும் நெருங்கிய தோழிகள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |